Friday, 25 November 2016

மொபைல் போனை ஆத்திரத்தில் எறியும் காதலர்களுக்காக

மொபைல் போனை ஏதோ கையெறி குண்டு போல சில நேரங்களில் நாம் பயன்படுத்துவதுண்டு. SJ Suriyaa அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.  பல நேரங்களில் நமது மொபைல் தவறி விழுந்து சில்லு சில்லா சிதறிப் போகும்.
எப்படி மகிழுந்துகளில் (Cars)  ஒரு பலூன் வைத்து விபத்து நடக்கும் போது டக்குனு வர வைச்சு பயணிகளை காப்பாத வழி இருக்கோ.. அதே மாதிரி மொபைல், டிஜிடல் காமெரா, Tablets போன்றவற்றை Air bag மூலம் அவசரத்தில் பாத்துக்காகும் வழி ஒன்றை Amazon நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் முதல் படியாக இந்த யோசனைக்கு காப்புரிமை பெற்றுள்ளது.
புதிய Kindle  உபகரணத்தில் இந்த Air Bag வசதி 2019இல் செய்யப்படலாம் என தெரிகிறது. மக்கள் விரும்பும்பட்சத்தில்  அனைத்து மொபைல் சாதனங்களுக்கும் புதிய உறை போன்ற ஒன்றை Amazon விரைவில் விற்க இருக்கிறது.
நீங்கள் எப்படி? இந்த புது Airbag மொபைல் கவரை வாங்குவீர்களா?  இல்ல கழுத்துல தாலி (Mobile Tag) போட்டு மொபிலுக்கு வேலி போடுவீங்களா?

மற்றவர் தொட்டவுடன் கைபேசி திரையை மூடும் புதிய மென்பொருள்!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கைபேசி திரையை தொட்டு பயன்படுத்துவோம். அழுத்தும் வேகம், மேலே கீழே தடவுவது என இந்த செயல்கள் ஒவ்வொரு ஆளுக்கும் வேறுபடும்.
இந்த வேறுபாடுகளை வைத்து அந்தக் கைப்பேசியின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிந்து மற்றவர் தொட்டால் திரையை அணைத்துவிடும் புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இலியாநஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் Cheng Bo மற்றும் அவரின் நண்பர்கள் Silent Sense எனும் இந்த மென்பொருளை எழுதியுள்ளார்கள்.
இதை நிறுவியது முதல் உங்களின் விரல் அசைவு வேகம், தொடும் அழுத்தம், இழுக்கும் முறை  போன்றவற்றை உள்வாங்கி பதிந்துகொள்ளும்.
100 நபர்களிடம் நடத்திய சோதனையில் இந்த மென்பொருள் 98% அளவில் உரிமையாளரை சரியாகக் கண்டுபிடித்துவிட்டது.
பிற மென்பொருள்கள் மற்றும் விளையாட்டுகள் விளையாடும் போது இந்த மென்பொருள் வேலை செய்யாது. ஆனால் முக்கியமாக மின்னஞ்சல், குறுந்தகவல் மற்றும் புகைப்படங்களை பார்க்கும் போது இது செயல்பட்டு பிறர் பயன்படுத்தாத வண்ணம் காக்கும்.
விரைவில் Silent Sense மென்பொருள் அனைவரின் பயன்பாட்டிற்கும் வர இருக்கிறது.

உங்கள் ஐபோனை வேகமாக செயல்பட வைக்கும் யுக்திகள்:

அன்றாடம் பயன்படுத்தும் ஐபோன்கள்  நாளடைவில் மிகக் மெதுவாக செயல்படுவது பலருக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பிரச்சனையே! இது போன்ற பிரச்சனைகளை  சில வழிமுறைகளை கையாண்டால் எளிதில் நீக்கி விடலாம்.   ஐபோன் பயனர்களுக்கான முக்கிய வழிமுறைகள் பின்வருமாறு :
*மொபைலில் அளவுக்கதிகமாக சேமித்து வைத்துள்ள பழைய  புகைப்படங்களை மற்றும் தேவையில்லாத  டாக்குமெண்ட்டுகளை  நீக்குவதும்    மிக  அவசியமே .  நூற்றுக்கணக்கான  அளவு புகைப்படங்கள்  இருப்பின் அவற்றை   கணினியில் ஒரு போல்டரில் போட்டு வைப்பது சிறந்தது.
*அதிகளவு ஏற்றி வைத்துள்ள பயன்பாடுகளை நீக்க வேண்டும்  . ஏனெனில் அவை அதிக அளவு இடங்களை ஐபோனில் ஆக்கிரமிப்பு செய்து ஐபோனை மெதுவாக இயங்கவைக்கும் . இவை எந்த அளவுக்கு  இடங்களை  ஆக்கிரமித்து கொண்டுள்ளன என்பதை அறிய  போனில்  Settings > General > Storage & iCloud Usage > Manage Storage.- க்கு சென்று பார்த்தால் அறியலாம் . இதனால் மிக முக்கியமான பயன்பாடுகளை மட்டும் சேமித்து வைப்பது நன்று.
*பழைய குறுந்தகவல் செய்திகளை    மாதக்கணக்கில் வைத்திருந்தால்   அது மொபைலின் வன்பொருளை பாதிக்கும் வாய்ப்புண்டு.இதற்கு தகுந்த தீர்வு  என்னவென்றால் உங்கள் போனில் உள்ள குறுந்தகவல்களை குறிப்பிட்ட கால வரையறைக்கு மட்டும் சேமித்து  வைத்திருக்கும்  அமைப்புகளை அமைத்துவிட்டால்  அவை குறிப்பிட்ட காலம் வரைக்கும்  இன்பாக்ஸில் காணும்படி செய்யலாம்.இதற்கு  Settings > Messages > Keep Messages. என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.
*ஐபோனை உங்களது கணினி போன்று பயன்படுத்த வேண்டும். அதாவது  அடிக்கடி இணைய தேடல் வரலாறுகளை  நீக்கிக்  கொண்டே இருப்பது அவசியமே. இடைமாற்று நினைவகம் என்று கூறப்படுகின்ற அதாவது  பலமுறை அணுகப்படும் தரவுகளுக்கு ஒதுக்கப்படும் ஒரு விரைவு நினைவகத்தினை  அடிக்கடி அழித்து  விடுவது அவசியம் . இதற்கு  மொபைலில் Settings > Safari,-க்கு சென்று  Clear History and Website Data  வை தட்டினால் போதும்.
*உங்கள் ஐபோன் மெதுவாக இயங்க ஒரு முக்கிய காரணம் அதிலிருக்கும்  பயன்பாடுகளின்  ஆட்டோ  அப்டேட்டுகலாகத்தான் இருக்கும். தேவையற்ற பயன்பாடுகளின் அப்டடேட்டுகளை நீக்க இது ஒரு சிறந்த வழியாகும். இதற்கு உங்கள் மொபைலில் Settings > iTunes & App Store-க்கு சென்று    OFF MODE  யை  தேர்ந்தெடுக்க வேண்டும்.
*மேற்கூறியது போன்றே  ஆட்டோமேட்டிக்  அப்டேட்டுகளை  தேவையற்ற இசை ,நூல்கள் போன்றவற்றை பதிவிறக்கங்கள் செய்யாமல்   தவிர்கும்படி  செய்யலாம்.இதற்கு  மொபைலில் Settings > iTunes & App Store-க்கு சென்று   apps, books, music -இல்   OFF MODE  யை தட்டினால் போதும்.
*மேலும் அடிக்கடி உங்கள் மொபைலில்  உங்களுக்கு அருகிலிருக்கும் வை-பை இணைப்புகளுடன் இணைக்கவா? என்பது போன்ற கேள்விகளுக்கு ஆம் என்ற பதிலை கொடுத்தால் அது  உங்கள் சாதனத்தை மிக மெதுவாக செயல்பட வைக்கும். இதனை  நீக்க   Settings > Wi-Fi > Ask to Join Networks  இல்   OFF MODE  யை தேர்ந்தெடுக்க வேண்டும் .
*அன்றாடம்  முடிந்த வரையில் ஒருமுறையாவது  ஐபோனை ரீஸ்டார்ட் செய்வதும் மொபைல் வேகத்தை அதிகரிக்கும் வழிகளில் ஒன்றே ! இதனால் ஐபோன் அடிக்கடி மந்தாமாகாமல் தடுக்கலாம்.
*பேட்டரி டாக்டர் என்ற பயன்பாட்டினைக் கொண்டு உங்கள் ஐபோன்கள் எவ்வளவு மெதுவாக  இயங்குகிறது என்பதை அறியலாம். மெதுவாக இயங்குகிறது என்றால் அதிலுள்ள நினைவகத்தை மறு  ஒதுக்கீடு செய்து  வழங்க உதவுகிறது.
இது போன்ற வழிமுறைகளை கடைபிடித்தால்  ஐபோனின் ஆயுள்காலத்தினை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கல் ஐபோன் சாதனம்   மெதுவாக செயலபாடாமல் தடுக்கலாம்.